
புதுடெல்லி, ஜன. 3- மாநிலங்களவையில்கேள்வி நேரத்துக்குப் பிந்தையநேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் இது மாநிலங்களவை வரலாற்றில் ஒரு சாதனை என்றும் சபாநாயகர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் பெருமிதம்
மாநிலங்களவையில் பேசிய அவர் கூறியதாவது-
நாடாளுமன்ற மாநிலங்களவை ஒரு வரலாற்றைப் படைத்துள்ளது.கேள்வி நேரத்துக்குப் பிந்தையநேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினைகள் அனைத்தும் விவாதப்பொருள் பட்டியலில் முழுமையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை அமைதியாக இப்பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளது. இதன் மூலம் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்திலும் உறுப்பினர்கள்கேள்வி நேரத்துக்குப் பிந்தையநேரத்தை வீணடிக்காமல் இதுபோல குறித்த பிரச்சினைகள் பற்றி பேசித்தீர்க்க வேண்டும்.
உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தொடர்பாக அமைச்சர்கள் உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.