கூவத்தூரில் ஊற்றிக்கொடுத்து கூத்தாடி குடியை கெடுத்தவர்தான் TTV தினகரன். அமைச்சர் சி.வி சண்முகம் சரமாரி தாக்கு.

Published : Feb 12, 2021, 10:50 AM IST
கூவத்தூரில் ஊற்றிக்கொடுத்து கூத்தாடி குடியை கெடுத்தவர்தான் TTV தினகரன். அமைச்சர் சி.வி சண்முகம் சரமாரி தாக்கு.

சுருக்கம்

ஸ்டாலின் அம்பானி வீட்டு பிள்ளை, அவருக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற அமைச்சர், டிடிவி தினகரன், சசிகலாவை கடுமையாக விமர்ச்சித்தார்.  அதாவது கூவத்தூரில் ஊற்றிக்கொடுத்து, கூத்தாடி, குடியை கெடுத்தவர் தான்  டிடிவி தினகரன். 

கூவத்தூரில் ஊற்றிக்கொடுத்து கூத்தாடி குடியை கெடுத்தவர்தான் டிடிவி தினகரன், அவரிடம் இருந்து சசிகலா தப்பித்துக் கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஆவேசம் தெரிவித்துள்ளார். அதேபோல் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டால் ஸ்டாலின் விவசாயி ஆக முடியாது என்றும் அவர் ஸ்டாலினை கடுமையாக தாக்கியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது, அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுக திமுக இடையே நேரடி போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இரு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். இதற்கிடையில் நான்காண்டு சிறை தண்டனை நிறைவுசெய்து சசிகலா விடுதலையாகி தமிழகம் திரும்பி இருப்பது அரசியல் களத்தை மேலும் சூடாக்கி உள்ளது. இப்போது ஒரே நேரத்தில் அதிமுக, திமுக, அமமுக என இரு கட்சிகளையும் தாக்கிய விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்துக்கு மாறாக தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நேற்று சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும்  திட்டத்தின் தொடக்க விழா விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது அப்போது சுமார் 600 பேருக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி  உதவியை அமைச்சர் சி.வி சண்முகம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது:  ஸ்டாலின் ஊர் ஊராக பச்சை துண்டு போட்டு விவசாயிகளை ஏமாற்றி வருகிறார், பச்சைத் துண்டு மட்டும் போட்டுக் கொண்டால் ஸ்டாலின் விவசாயி ஆகி விட முடியாது, விவசாயத்தை உண்மையிலேயே தெரிந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான், எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் தனது கிராமத்திற்கு இன்றும் சென்று விவசாயத்தை கவனித்து வருகிறார். இதை பார்த்தாலே மக்களுக்கு உண்மையான விவசாயி யார் என்று தெரிந்து விடும். 

ஸ்டாலின் அம்பானி வீட்டு பிள்ளை, அவருக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற அமைச்சர், டிடிவி தினகரன், சசிகலாவை கடுமையாக விமர்ச்சித்தார்.  அதாவது கூவத்தூரில் ஊற்றிக்கொடுத்து, கூத்தாடி, குடியை கெடுத்தவர் தான்  டிடிவி தினகரன். அவரிடம் இருந்து சசிகலா தப்பித்துக் கொள்ள வேண்டும். அதிமுக கழகம் என்பது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. எந்த ஒரு காலத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் மீண்டும் ஒரு குடும்பத்திடம் அதை ஒப்படைத்து சிக்கிக் கொள்ள விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். 

 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!