தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் திமுக அமைப்புச் செயலாளர். அதிமுகவை ஏறியடித்த ஆர்.எஸ் பாரதி மீது புகார்.

Published : Feb 12, 2021, 10:20 AM IST
தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் திமுக அமைப்புச் செயலாளர். அதிமுகவை ஏறியடித்த ஆர்.எஸ் பாரதி மீது புகார்.

சுருக்கம்

தகாத வர்த்தைகளால் பேசியுள்ள  திமுக கழக அமைப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், ஆர்.எஸ் பாரதி அவர்கள் மீது பொதுவெளியில் பெண்களை இழிவு செய்தல், 

தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பெண் குலத்தை இழிவுபடுத்தும் வகையிலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் இன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ஆகியோரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி வருவதாக, அதிமுக சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.எம் கோபி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.  அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- 

வாழ்ந்து மறைந்த மனித தெய்வம், மக்கள் மனங்களில் வாழும் இதய தெய்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு ஜெயலலிதா மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், இளம்பெண் குளத்தை இழிவு செய்யும் விதமாகவும், தகாத வார்த்தைகளால் அநாகரிகமான முறையில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் மாண்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், 9-2-2021 அன்று அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார். 

தகாத வர்த்தைகளால் பேசியுள்ள  திமுக கழக அமைப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், ஆர்.எஸ் பாரதி அவர்கள் மீது பொதுவெளியில் பெண்களை இழிவு செய்தல், அவதூறு பரப்புதல், சட்டம் ஒழுங்கை கெடுத்தல், வன்முறையை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஆர்.எஸ் பாரதி அவர்களின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதேபோல் புகாருக்கு ஆளாகியுள்ள இவர், ஏற்கனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவதூறுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!