அதிமுகவை எப்போது மீட்போம் எனத் தெரியாது... ஆனால் மீட்டெடுப்போம்.. தடுமாறும் டிடிவி.தினகரன்..!

Published : Feb 12, 2021, 10:41 AM ISTUpdated : Feb 12, 2021, 10:44 AM IST
அதிமுகவை எப்போது மீட்போம் எனத் தெரியாது... ஆனால் மீட்டெடுப்போம்.. தடுமாறும் டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

சென்னை திநகர் இல்லத்தில் சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு மணிநேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்;- அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என்று தெரியாது. ஆனால் மீட்டெடுப்போம். அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுகவை ஆரம்பித்தோம். 

முதலமைச்சர் பதவியிலும், அமைச்சர் பதவியிலும் இருந்துகொண்டு எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் தரமற்ற முறையில் பேசி வருகின்றனர். பேசுபவர்கள் பேசட்டும். காலம் அவர்களுக்கு பதில் சொல்லும். ஒருவாரமாக ஏன் பதற்றத்தில் இருக்கிறார்கள். என்ன காரணம்? நாங்கள் பேசாமல் வந்தோம். நாங்கள் பேசாமல் இருக்கிறோம். நான் யாரையாவது கண்ணியக்குறைவா பேசியிருக்கேனா? கட்சி ஆரம்பித்தது அதிமுக மீட்டெடுக்க என்று சொல்கிறேன். அது தப்பா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், பொதுச்செயலாளரை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு வார காலமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம் ஏன் இவர்கள் பதறுகிறார்கள். பதவி போனால் எங்கு போவார்கள் என தெரியும். சி.வி. சண்முகம் பேசியது அவரின் தரத்தை காட்டுகிறது. சி.வி. சண்முகம் நிதானமாக இருக்கிறாரா? என்பதை முதலில் பார்க்க வேண்டும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!