அபாய கட்டத்தில் இருக்கும் அதிமுக ஆட்சி!! இபிஎஸ், ஓபிஎஸ்சை திணறடித்த டிடிவி!!

Published : Sep 13, 2018, 07:06 AM ISTUpdated : Sep 19, 2018, 09:24 AM IST
அபாய கட்டத்தில் இருக்கும் அதிமுக ஆட்சி!! இபிஎஸ், ஓபிஎஸ்சை திணறடித்த டிடிவி!!

சுருக்கம்

சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். மேலும் ஒரு நோயாளி, ஐசியுவில் இருக்கும்போது, அவரது ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழப்பது போல இந்த ஆட்சியில் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது என விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அமமுக வெற்றி பெறும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் தற்போதுள்ள ஆட்சி முடிவுக்கு வரும் என்றார். இந்த அரசு மீது, முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகின்றன. 

ஒரு நோயாளி, ஐசியுவில் இருக்கும்போது, அவரது ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழப்பது போல, இந்த ஆட்சியில் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தற்போது தமிழகத்தில் மின்வெட்டு பெரும் பிரச்னையாக உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, இந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கான அறிகுறி வந்துவிட்டது. 

இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதுதான் உண்மை. தற்போதுள்ள அரசுக்கு மக்கள் மீதும், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதிலும் அக்கறை இல்லை. அவர்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எம்.எல்.ஏ-க்களை காப்பாற்றுவதையே கொள்ளையாக இருந்து வருகின்றனர். இரண்டு 2 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இரண்டாம் இடத்துக்கு தான் ஆளும் கட்சியும், பிரதான கட்சிகளும் போட்டியிடுகின்றன என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..