ராமநாதபுரத்தில் சித்திரைத் திருவிழா … டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு கூடிய அடேங்கப்பா கூட்டம் !!

Published : Apr 09, 2019, 08:32 PM IST
ராமநாதபுரத்தில் சித்திரைத் திருவிழா … டி.டி.வி.தினகரன்  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு கூடிய அடேங்கப்பா கூட்டம் !!

சுருக்கம்

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்ற ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சித்திரைத் திருவிழாபோல் கூடிய மக்கள் கூட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதே போல் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த இரு முக்கிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ள நிலையில் அமமுக கூட்டணியில்லாமல் தனியே கெத்தாக களம் இறங்கியிருக்கிறது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தினகரனுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதிமுக ஓட்டுகளை அவர் பிரித்துவிடுவாரோ என அச்சத்தில் உள்ள அக்கட்சியினர் முடிந்த அளவுக்கு அவருக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்தை ஆதரித்து தினகரன்  ராமநாதபுரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பரிசுப் பெட்டகம் சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

தினகரன் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ராமநாதபுரமே மிரண்டு போகும் அளவுக்கு கூடிய மக்கள் கூட்டத்தை அமமுக கட்சியினரே எதிர்பர்க்கவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணி கட்சியினர் இந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

திமுகவும், பாஜகவும் வேறு வேறு இல்லை.. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்..! விஜய் நம்பிக்கை
எம்.ஜி.ஆரின் பிரசாரம் - கலைஞரின் வியூகம்: காமராஜரையே அதிர வைத்த 1971 களம்..! 55 ஆண்டு ரெகார்ட்..