உங்க சாதி உள்ளே வராதே! உன் பிரசாரம் எனக்கு தேவையில்லை!: விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒழித்து ஓரங்கட்டுகிறதா தி.மு.க. கூட்டணி?

Published : Apr 09, 2019, 07:16 PM IST
உங்க சாதி உள்ளே வராதே! உன் பிரசாரம் எனக்கு தேவையில்லை!: விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒழித்து ஓரங்கட்டுகிறதா தி.மு.க. கூட்டணி?

சுருக்கம்

தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எந்நாளும் பஞ்சாயத்துதான். கருணாநிதியை தன் தந்தையளவுக்கு மதித்த திருமா, ஸ்டாலினை தன் நண்பராக கூட ஏற்றுக் கொண்டதில்லை.

உங்க சாதி உள்ளே வராதே! உன் பிரசாரம் எனக்கு தேவையில்லை!: விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒழித்து ஓரங்கட்டுகிறதா தி.மு.க. கூட்டணி?

தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எந்நாளும் பஞ்சாயத்துதான். கருணாநிதியை தன் தந்தையளவுக்கு மதித்த திருமா, ஸ்டாலினை தன் நண்பராக கூட ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ‘தளபதி ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவோம்’ என்று மேடைக்கு மேடை திருமா முழங்கியும் கூட அவருக்கு உரிய அங்கீகாத்தை தந்ததில்லை ஸ்டாலின். 

இந்நிலையில் கூட்டணியும் அமைந்து, வி.சி.க.வுக்கு இரண்டு சீட்களையும் ஒதுக்கிவிட்டார்கள். இத்தோடு பிரச்னை அடங்கியதா? என்றால் இல்லை இல்லவேயில்லை. அதாவது கொங்கு மண்டலம் எனப்படும் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் தி.மு.க. கூட்டணியினர், விடுதலை சிறுத்தைகளை மதிப்பதேயில்லை, பிரசாரத்திலும் சேர்த்துக் கொள்வதில்லை! என்று பெரும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. 

இதுபற்றி விரிவாக பேசும் அரசியல் விமர்சகர்கள்...”உண்மைதான் தி.மு.க. கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் விடுதலை சிறுத்தைகளுக்கு மரியாதையே இல்லை எனும் புலம்பல் பெரிதாய் கேட்கிறது. காரணம்?...கொங்கு மண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதிக்கும் விடுதலை சிறுத்தைகள் மையப்படுத்தி இயங்கும் சாதிக்கும் எப்போதுமே பிரச்னைதான். சில காலங்களுக்கு முன், அந்த சமுதாய பெண்களைப் பற்றி வி.சி.க.வினரும், அதன் முக்கிய நிர்வாகிகள் சிலரும் மோசமாக பேசிவிட்டனர் என்று பெரும் பிரச்னை எழுந்தது. 

அதேபோல, தங்கள் சமுதாய பெண்களை அவர்கள் கேவலப்படுத்தி சித்தரித்துவிட்டனர்! என்று இவர்கள் பிரச்னை செய்தார்கள். இதனால் சாதாரணமாகவே இரண்டு சாதிக்கும் இடையில் முட்டல், மோதல், உரசல்கள்தான். இந்நிலையில்தான், தி.மு.க. கூட்டணிக்கு திருமா முயன்றார். உடனே தி.மு.க.வில் கோலோச்சும் கொங்கு மாவட்ட முக்கியஸ்தர்கள் ‘வேணாம் தளபதி. அவங்களை சேர்த்துக்கிட்டா எங்க சாதிக்காரங்களை பகைச்சுக்க வேண்டிவரும் நம்ம கட்சி.’ என்றார். இதை ஏற்க நினைத்தாலும், இதே பகுதியில் இருக்கும் வி.சி.க.வின் வாக்கு வங்கியை கணக்கில் வைத்து கூட்டணியை ஓ.கே. செய்து, வேறு மாவட்டங்களில் இரண்டு சீட் கொடுத்துவிட்டார் ஸ்டாலின். 


இதில் கொங்கு தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளுக்கு வருத்தம்தான் என்றாலும் கூட,  நம்ம மண்டலத்தில் வி.சி.க.வுக்கு சீட் தராத வரைக்கும் சந்தோஷமே! என்று அமைதியாகினர். ஆனால், ஊழியர் கூட்டங்களுக்கோ, கூட்டணி ஆலோசனைக்கோ, பிரசாரங்களுக்கோ எதுக்குமே வி.சி.க.வினரை கொங்கு மண்டல தி.மு.க.கூட்டணியின் மற்ற கட்சியினர் அழைப்பதேயில்லையாம். அப்படியே இவர்களாக போய் நின்றாலும் பேசுவதில்லை, வீடுகளுக்குள் அனுமதிப்பதில்லை, ஒண்ணுமண்ணாக டீ, காஃபி சாப்பிட்டு புழங்குவதில்லை என்று பெரும் பிரச்னைகள். இதை ஸ்டாலின் வரையில் கொண்டு சென்றும் எந்த முன்னேற்றமுமில்லை. 

தி.மு.க. மட்டுமில்லை, அந்த கூட்டணியிலிருக்கும் வேறெந்த கட்சியுமே வி.சி.க.வினருக்கு சம அந்தஸ்து தருவதில்லை! என்று புலம்பல் எழுந்துள்ளது. ’உங்க சாதி ஆளுங்கதான் உங்க கட்சியில இருக்கிறாங்க. அதனால இந்த யிந்த இடத்துக்கெல்லாம் நீங்க பிரசாரத்துக்கு வரவேண்டாம்.’ என்று ஓப்பனாகவே ஒதுக்கி வைக்கிறார்களாம். 

திருமாவிடம் இது பற்றி அக்கட்சியினர் புலம்பியபோது ‘சமூக நீதி மறுக்கப்படுதுங்கிறதை எதித்துதான் அரசியல் இயக்கம் ஆரம்பிச்சோம். நமக்கே இந்த நிலைன்னா, நம்ம மக்களை நினைச்சுப் பாருங்க. அரசியலில் ஒரு உயரம் தொடும் வரை பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்குங்க.’ என்று ஆறுதல்படுத்தினாராம். உண்மையில் இது மிகப்பெரிய கொடுமைதான்.” என்று நிறுத்தினார்கள். பெரியாரின் ‘சுயமரியாதைக்கட்சி’ வழி வந்த தி.மு.க.வின் தலைமையில் இயங்கும் கூட்டணியில் இப்படியொரு அவலமா? வெட்கம், வேதனை!

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!