சூடு பிடிக்கும் அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம்! களத்தில் குதிக்கிறார் நடிகை விந்தியா!

By manimegalai a  |  First Published Apr 9, 2019, 7:01 PM IST

தமிழகத்தில் நடைபெற உள்ள பதினெட்டு சட்ட மற்ற தொகுதிகளுக்க்கான இடைத்தேர்தலில், அதிமுக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான விந்தியா பிரச்சாரம் செய்வார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
 


தமிழகத்தில் நடைபெற உள்ள பதினெட்டு சட்ட மற்ற தொகுதிகளுக்க்கான இடைத்தேர்தலில், அதிமுக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான விந்தியா பிரச்சாரம் செய்வார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

திரையுலகை விட்டு தற்போது விலகி இருக்கும் நடிகை விந்தியா, அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார்.  இவர் ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தலில்,  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார்.

Latest Videos

இந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரத்தில் களமிறங்க உள்ளார். இந்த தகவலை அதிமுக தலைமை கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி நாளை முதல் 16ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

 10 ஆம் தேதி, சோளிங்கர்,  குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார்.

 11 ஆம் தேதி, ஓசூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

12ஆம் தேதி, பெரியகுளம்,  ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

13  ஆம் தேதி, நிலைக்கோட்டை, சாத்தூர் ,விளாத்திகுளம், ஆகிய பகுதிகளிலும்... 

14 ஆம்  தேதி பரமக்குடி, மானாமதுரை, ஆகிய இடங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

15 ஆம் தேதி, திருவாரூர் பகுதியிலும்...

16ஆம் தேதி பூந்தமல்லி, திருப்போரூர், ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.  

click me!