மக்களின் உயிரோடு விளையாடுகிறார் எடப்பாடி..!! ஈகோ பார்க்காமல் செயல்பட சொன்ன டிடிவி தினகரன்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2020, 10:07 AM IST
Highlights

இந்த இக்கட்டான நேரத்தில் அரசியல் கட்சிகளும் ,  மக்களும் அரசோடு இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கும்போது பழனிச்சாமி அரசு மக்களை பாதிப்பின்றி காப்பாற்ற ஈகோ பார்க்காமல் செயல்படவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் 

11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் தமிழகத்திலும் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு செயல்படுத்தி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் :- உலகளவில் வரலாறு காணாத அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்தியாவும் போராடி வருகிறது மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும்  முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளுக்கு மக்கள் எந்த அளவுக்கு முழு ஆதரவு அளிக்கிறார்கள் என்பது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட சுய ஊரடங்கே சாட்சியாகும் .  மேலும் பிரதமர் கூறியிருப்பது போல இது மிகப்பெரிய போராட்டத்தின் தொடக்கம் தான் .

குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வல்லுனர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள் அதனால்தான் நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது .  பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது தேசிய அளவில் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில் தமிழகத்தில் மட்டும் 11 ,  12 ஆம் வகுப்பு  தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பழனிச்சாமி அரசு அறிவித்திருப்பது மக்களின் உயிரோடு விளையாடும் பொறுப்பற்ற செயலாகும் .  எனவே எத்தனை தேர்வர்கள் மீதம் இருந்தாலும் அவற்றைக் ஒத்திவைக்க வேண்டும் மத்திய அரசு தலையிட்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 3 மாவட்டங்களில் முடக்கி வைத்திருக்கும் நிலையில் ,  இதற்குப் பிறகும் பழனிச்சாமி அரசின் நிலைமையின் தீவிரத்தை உணராமல் செயல்படுவது சரியானதல்ல . 

மக்களுக்கு தேவையை விளக்கி குறைந்தபட்சம் அடுத்த மூன்று வாரங்களுக்கு தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்துவதே சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமையும் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாதவாறு உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும் மேலும் கேரளா ,  தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டது போல அமைப்புசாரா தொழிலாளர்கள்  உள்ளிட்டோருக்கு உதவித் தொகையையும் பழனிச்சாமி அரசு வழங்க வேண்டும் .  

டெல்லியில் செய்திருப்பதை போன்ற தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவிக்க வேண்டும் இந்த இக்கட்டான நேரத்தில் அரசியல் கட்சிகளும் ,  மக்களும் அரசோடு இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கும்போது பழனிச்சாமி அரசு மக்களை பாதிப்பின்றி காப்பாற்ற ஈகோ பார்க்காமல் செயல்படவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

 

 

click me!