கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்... ஒரு மாத சம்பளத்தைத் தரும் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்!

By Asianet TamilFirst Published Mar 22, 2020, 7:42 PM IST
Highlights

 “கொரோனா தொற்று நோய் பரவலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

கொரோனா வைரஸால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை வழங்குவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


கொரோனா வைரஸ் பாதிப்பால் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில், திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் பரவலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசும், உடனே போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும் இந்த மனிதநேய முயற்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.


கொரோனா தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இன்று போல் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி, மிகுந்த விழிப்புணர்வுடனும் சுய சுகாதாரத்தைக் கடைப்பிடித்தும், கொரோனா தொற்று நோய் பரவலை முழுமையாகத் தடுத்திட வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

click me!