பசியால் பாதிக்கப்படக் கூடாது... மு.க.ஸ்டாலினுக்கு டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்..!

Published : May 08, 2021, 10:52 AM IST
பசியால் பாதிக்கப்படக் கூடாது... மு.க.ஸ்டாலினுக்கு டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்..!

சுருக்கம்

கூடுதல் விலையில் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுப்பதற்கு முறையாக கண்காணிப்பினை மேற்கொள்வது அவசியம் என அமமுக கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.  

கூடுதல் விலையில் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுப்பதற்கு முறையாக கண்காணிப்பினை மேற்கொள்வது அவசியம் என அமமுக கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் 190ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், ‘’தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கிற முழு ஊரடங்கால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை- எளிய மக்கள் பசியால் பாதிக்கப்படாமல் இருக்க அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் கட்டணமின்றி தமிழக அரசு உணவு வழங்கிட வேண்டும்.

மேலும் கடந்த முறை போல அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கடைகளில் குவிவதைத் தடுப்பதற்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். கூடுதல் விலையில் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுப்பதற்கு முறையாக கண்காணிப்பினை மேற்கொள்வதும் அவசியமாகும்’’எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!