குழப்பத்தில் அதிமுக, திமுக!! செம்ம ஸ்பீடாக வேட்பாளரை அறிவித்து களத்தில் இறங்கிய டிடிவி தினகரன்!!

By sathish kFirst Published Jan 4, 2019, 1:32 PM IST
Highlights

திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவை அடுத்து, காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஆனால், தினகரனின் அமமுக படு பயங்கரம் என்றுதான் சொல்லணும், ஆமாம் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக என இருவரும் வேலைகளை தொடங்கும் முன்பே தேர்தல் அலுவலகம், வேட்பாளர் தேர்வு, நோட்டிஸ் வரை அடித்து பிரசாரத்திற்க்கே தயாராக இருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக திருவாரூர் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாரை வேட்பாளராக நிறுத்த போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. அதிமுக, திமுகவை எதிர்த்து அமமுக சார்பாக யார் நிற்க வைக்கலாம் என சஸ்பென்ஸாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தினகரன்  சில முக்கிய உறுப்பினர்களுடன் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது, யாரை நிற்கவைத்தால் ஜெயிப்பார்கள், நாம் நிறுத்துபவர்கள் காசு செலவு செய்வார்களா என  தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். 

இந்த நிலையில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிமுக, திமுக அநேகமாக இன்றுதான் வேட்பாளரை அறிவிக்க  உள்ள நிலையில், தினகரனோ முந்திக்கொண்டு அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளார். 

click me!