மோடியையும் எடப்பாடியையும் ஒரு சேர எதிர்க்கும் டிடிவி..!! - அரசுகளுக்கு கருப்பு கொடி காட்ட அதிரடி முடிவு...

Asianet News Tamil  
Published : Sep 06, 2017, 12:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
மோடியையும் எடப்பாடியையும் ஒரு சேர எதிர்க்கும் டிடிவி..!! - அரசுகளுக்கு கருப்பு கொடி காட்ட அதிரடி முடிவு...

சுருக்கம்

ttv dinakaran agaist modi and edappadi about anitha issue

இன்று ம.தி.மு.க.வின் கையில் எந்த எம்.எல்.ஏ.வும் இல்லை, எந்த எம்.பி.யும் இல்லை. ஆனால் தன் கையில் 20 எம்.எல்.ஏ.க்களும், சில எம்.பி.க்களும் இருப்பதாக காண்பித்து  தமிழகத்தில் ஆட்சிக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன். ஆனாலும் கூட ம.தி.மு.க. வலுவானதா அல்லது தினகரன் அணி வலுவானதா? என்று கேட்டால் ம.தி.மு.க.வே என்றுதான் சொல்ல வேண்டும். 

காரணம் ம.தி.மு.க. என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தை வரையறுத்து அதை முழுவதுமாக ஏற்றுக் கொண்ட ஒரு ஒட்டுமொத்த அமைப்பு. ஆனால் தினகரன் கையிலிருப்பது அ.தி.மு.க. வின் ஒரு அங்கம் அவ்வளவே.

கற்பனைக்கு எட்டிய தூரம் வரை வைகோவுக்கு அரசியல் மற்றும் அதிகார வெற்றி என்பதே தெரியவில்லை என்பது புரிந்திருந்தும் அவரோடு பயணிப்பவர்கள்தான் ம.தி.மு.க.வினர்.

ஆனால் கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் ஆதாயம் மங்கலாக தெரிய ஆரம்பித்தாலே கூட எதிரணிக்கு தாவிவிடும் வாய்ப்புடையவர்கள்தான் தினகரனோடு இருக்கின்றனர். 

தனது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நம்பி வைகோவால் எதையும் செய்துவிட முடியும். ஆனால் தன்னோடு இருக்கும் எம்.எல்.ஏ.க்களை நம்பி தினகரனால் என்னதான் செய்துவிட முடியும்? 

ஆனால் இத்தனை சறுக்கல்கள் இருந்தும், சிக்கல்கள் இருந்தும் கூட மாநில மற்றும் மத்திய அரசுகள் இரண்டையும் மிக சாதாரணமாக எதிர்த்து அரசியல் செய்கிறார் தினகரன். இது தமிழக அரசியலுக்கு மிக புதிது. 

அடிப்படையில் ஆளும் கட்சியை சேர்ந்தவரான தினகரன், அதன் முதல்வரை எதிர்ப்பதற்காக அக்கட்சிக்குள்ளிருந்தே சிலரை எடுத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல் இந்த தேசத்தையே ஆளும் இயக்கமான பா.ஜ.க.வையும் எதிர்த்து நிற்கிறார் என்பது ஆச்சரியம்.

அதிலும் தினகரனால் எதிர்க்கப்படும் அ.தி.மு.க. ஆட்சியானது மத்திய அரசின் ஏவலின் கீழ் செயல்படுகிறது என்பது இதில் இன்னொரு ஹைலைட். 

சரி, இதில் தினகரனுக்கு எங்கிருந்து இத்தனை தைரியம் வருகிறது? சிம்பிள்! எவன் எதற்கும் அஞ்சமாட்டான்? பணம், அதிகாரம் என சகலத்தையும் கையில் வைத்திருப்பவன் எதற்கும் அஞ்சமாட்டான். அதேபோல் எதுவுமே இல்லாதவனும் எதற்கும் அஞ்சமாட்டான்.

தினகரனோ இரண்டும் கலந்த கலவை. அவர் கையில் மாளாத பணமிருக்கிறது, ஆனால் அவர் தன் வசம் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பதவி கூட என்றோ எடப்பாடி கூட்டத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. 

ஆக தினகரனின் கையில் அதிகார வஸ்து என்று எதுவுமில்லை. கரன்ஸி என்றழைக்கப்படும் வெறும் காகிதக்கட்டுகள் மட்டுமேயிருக்கின்றன. இந்த காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்புத்துகள்கள் இவரை நோக்கி வரலாம், அல்லது வராமலும் போகலாம். வந்தவகையும் சில நேரங்களில் உதிர்ந்துவிடலாம். 

எந்த நேரமும் அறுந்துவிடக்கூடிய நூலில் பலமான கரன்ஸி மாஞ்சாவை தடவி தினகரன் மலையை இழுக்கிறார். கவிழ்ந்தால் மலையை கவிழ்த்தவர் எனும் பட்டம், இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது சிங்கப்பூர் சிட்டிசன்ஷிப். 

மத்திய அரசைப் பொறுத்தவரையிலும் தினகரனுக்கு எந்த அச்ச உணர்வும் இருப்பதாக தெரியவில்லை. இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தேர்தல் கமிஷனுக்கு பணம் கொடுத்ததாக சொல்லி தொடரப்பட்ட வழக்கில் சில நாட்கள் அவரை சிறை வைத்ததை விட எதையும் சாதிக்க முடியவில்லை டெல்லியால்.

இந்த விஷயத்தை முழுக்க முழுக்க தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தனது டிரேட் மார்க் சிரிப்பை அலட்சியமாய் உதிர்த்துக் கொண்டு பேட்டி தட்டுகிறார். சகல பாதுகாப்பு பராக்கிரமங்களை உடைய இம்மாநில முதல்வரும், மத்திய பாதுகாப்பில் இருக்கும் துணை முதல்வரும் செல்ல தயங்கும் ”நீட்” பலியாடான அனிதாவின் வீட்டுக்கு மெகா சைஸ் மலர் வளையத்தோடு தினகரன் சென்றதும், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சவால் விட்டு அவர் பேசியதும் ஹாட். 

தினகரனால் அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் காமெடி செந்தில் சொன்ன வாக்கியாமான ‘நான் ஆம்பிளை என்பதை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார் தினகரன்.’ என்பது இந்நேரத்தில் அவரது வைரிகளுக்கு நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல. 

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கறுப்புக் கொடியென்ன! வூடே கட்டி அடிபார்போல தினகரன். 

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!