மக்களைக் காப்பாத்தணும்... ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கை நீட்டிங்க... டிடிவி தினகரன் அதிரடி யோசனை!

Published : Apr 07, 2020, 07:58 PM IST
மக்களைக் காப்பாத்தணும்... ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கை நீட்டிங்க... டிடிவி தினகரன் அதிரடி யோசனை!

சுருக்கம்

தமிழக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கொரோனா மரணங்கள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றனர். இத்தகைய மரணங்களிலிருந்து பாடம் கற்க வேண்டியது அவசியம்.  

மக்களை முழுமையாகக் காப்பாற்ற தேவைப்பட்டால், ஏப்ரல் 14-க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் நாம் அனைவரும் இணைந்து முழு வீச்சில் கொரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதில், அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துவருகின்றனர்.
மக்களை முழுமையாகக் காப்பாற்ற தேவைப்பட்டால், ஏப்ரல் 14-க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம். ஆனால், அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கொரோனா மரணங்கள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றனர். இத்தகைய மரணங்களிலிருந்து பாடம் கற்க வேண்டியது அவசியம்.
பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக ஊரடங்கினால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை மற்றும் நடுத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்யவேண்டும். 10 நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே அவர்கள் படாதபாடு பட்டுவருகிறார்கள். அரசு அறிவித்த 1000 ரூபாய் உதவி இன்னமும் முழுமையாகச் சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும்போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டினைத் திட்டமிட்டுச் செய்யவேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!