உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்யக்கூடாது..!! நமக்கு மிஞ்சின பிறகே தர்மம் செய்ய வேண்டும் என அறிவுரை..!

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2020, 6:43 PM IST
Highlights

உயிர்காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை உடனே நிறுத்த வேண்டும் என மஜக பொதுச்செயலாலரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான முதமிமுன் அன்சாரி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

உயிர்காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை உடனே நிறுத்த வேண்டும் என மஜக பொதுச்செயலாலரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான முதமிமுன் அன்சாரி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.  கொரோனா வைரஸ் நோயை ஒழிக்கும் பணியை இந்தியாவெங்கும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவரும் நிலையில், முக்கிய உயிர் காக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது நல்லதல்ல.மனிதாபிமானம் எல்லையற்றது என்பது உண்மை. அதே சமயம் நமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகே, பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. 

நமது நாடு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு அதிக அளவில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் இறுதி வரையிலாவது இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க கூடாது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டல் தொனியிலான வேண்டுகோளுக்கு உடனடியாக பணிந்து, உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்பது நம் நாட்டின் நலன் சார்ந்த அரசியலுக்கு நல்லதல்ல. நம் நாட்டின் மக்கள் தொகை அளவுக்கேற்ப,  இது போன்ற மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியமாகும். மத்திய அரசு நம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். என வலியுறுத்தியுள்ளார். 

அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்  இந்நிலையில்,  இந்தியாவிடம் அதிக அளவில் உள்ள ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை தந்து உதவ வேண்டும் என ட்ரம்ப் இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருந்தார், ஆனால் இந்தியா இந்த மருந்தை ஏற்றுமதி செய்த தடை விதித்திருப்பதாக கூறியது,   இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா தடையை நீக்கி உதவ முன்வர வேண்டும் இல்லை என்றால் பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிந்திருந்தார் ,  இந்த நிலையில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் மருந்தை அனுப்பி வைக்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.   

 

click me!