அமெரிக்க துணை அதிபரான நம்ம ஊரு பெண்.. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை.. வாழ்த்து கூறி மாஸ் காட்டிய TTV

By vinoth kumarFirst Published Nov 8, 2020, 11:23 AM IST
Highlights

அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசுக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசுக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்று 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிஸ்க்கும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசின் வெற்றியை அவரது சொந்த ஊரான தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தினரும் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கு டிடிவி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அமெரிக்க வரலாற்றில் முதல்  பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியைச்  சேர்ந்த திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மனப்பூர்வமான  வாழ்த்துகள்.

அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள  துளசேந்திரபுரம் கிராமத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமையட்டும் என பதிவிட்டுள்ளார்.

click me!