சசிகலாவின் திட்டங்களை போட்டுடைத்த டி.டி.வி.தினகரன்..!

Published : Feb 20, 2021, 03:10 PM IST
சசிகலாவின் திட்டங்களை போட்டுடைத்த டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம்தேதி விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சசிகலா சந்திக்க உள்ளார்.  

மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம்தேதி விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சசிகலா சந்திக்க உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சசிகலா விடுதலையாகி கடந்த 8-ம்தேதி சென்னை திரும்பினார். சென்னை வந்தடைந்த சசிகலா தி.நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்திருந்ததால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும் டாக்டர்களின் ஆலோசனை படி தொடர்ந்து ஓய்வில் உள்ளார். சென்னையில் அவர் எப்போது கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவரது உருவப்படத்திற்கு சசிகலா வீட்டில் இருந்தபடியே மரியாதை செலுத்த உள்ளார். அதன் பிறகு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். சென்னையில் கோவிலுக்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளார். டாக்டர்கள் எப்போது வெளியில் செல்லலாம் என்று சொல்கிறார்களோ அப்போது சசிகலா கோவிலுக்கு செல்வார். கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார், செய்தியாளர்களை சந்திப்பார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!