தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் ரூ.55 உயர்வு..! விலைவாசி உயர வாய்ப்பு.? - டிடிவி தினகரன்

By Ajmal Khan  |  First Published Mar 22, 2023, 2:11 PM IST

சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக  காய்கறி, உணவு தானியங்களின் விலை உயரக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 


சுங்க கட்டணம் உயர்வு

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடியில் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்ககட்டணம் 55 ரூபாய் வரை உயர்த்த இருப்பதால் காய்கறி மற்றும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு லாரி உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

இந்தியாவே திரும்பி பார்க்கணும்.. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாள் குறித்த மு.க.ஸ்டாலின்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு

சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக  காய்கறி, உணவு தானியங்களின் விலை உயரக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் அதே போல காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ட்ரோல் வீடியோ வெளியிட்டதற்காக கைது என்றால்.!ஒட்டுமொத்த திமுக ஐடி பிரிவும் சிறையில் அடைக்கனும்- சீறும் அண்ணாமலை

click me!