ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்.! ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கும் டிடிவி தினகரன்

By Ajmal KhanFirst Published Feb 1, 2023, 12:26 PM IST
Highlights

கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வைக்கலாம் அல்லது வேறு ஒரு இடத்தில் வைக்கலாம் சுற்றுச்சூழலை பாதித்து கடலில் வைக்கக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அறிவாலயத்தில் பேனா சின்னம்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜி. ராமலிங்கத் ஜோதியின் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கலந்துகொண்டு  மணமக்களை வாழ்த்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பேனா நினைச்சனை வைப்பது தவறில்லை. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியான இந்த நேரத்தில் பேனா சின்ன வைப்பது தான் தவறு. வேண்டுமென்றால் அவர்கள் கட்சி சார்பில் பேனா நினைச்சினத்தை வைக்க வேண்டும். கடலில் வைத்து சுற்றுச்சூழல் பாதிக்காமல் அறிவாலயத்திலோ அல்லது வேறு இடத்திலயோ வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அதிமுக வேட்பாளரை அறிவித்த எடப்பாடி..! யார் இந்த தென்னரசு.? எத்தனை முறை எம்எல்ஏவாக தேர்வானர் தெரியுமா.?

 இரட்டை இலை முடங்கும்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் அப்போது தான்  திமுக என்ற அரக்கனை வெளியேற்ற முடியும். ஓ பன்னீர்செல்வம் வேட்பாளர் அறிவிக்கிறாரா என்பது பொறுமையாக இருந்து பார்ப்போம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்பதை பார்ப்போம் என கூறினார்.  2017ஆம் ஆண்டு நானும் ஓபிஎஸ்ம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆக மனு செய்தோம். அப்போது தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.  தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ்  இருவரும் கையெழுத்து போட்டால் தான்  இரட்டை இலை சின்னம் கிடைக்கும் இல்லையென்றால் சின்னம் முடக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் தென்னரசு- இபிஎஸ் அறிவிப்பு

 ஒரு சிலரின் சுயநலத்திற்காக அதிமுக மிக பலவீனமடைந்து வருகிறது. இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இது சுயநலத்தோடு பண திமிரால் சிலர் செயல்படுகிறார்கள்.  இதனால்தான் அதிமுக  இயக்கத்தை விட்டு வெளியேறி நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அம்மாவின் திருவருடத்தை தாங்கக்கூடிய கொடியிலும் குக்கர் சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.  கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லைன்றால் வருகின்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைப்பதற்காக முழு நம்பிக்கையுடன் போராடியிருக்கிறோம். காலம் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் திமுக என்ற தீய சக்தியை அழிப்பதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் இணைகின்ற காலம் வரும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கருணாநிதிக்கு நினைவுச்சின்னம்.!தமிழ்நாட்டின் வரலாற்றுப் பேனாவாக இருக்க வேண்டும்-பாஜகவை வெறுப்பேற்றும் காயத்ரி

click me!