துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும், உத்தரவை செயல்படுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என டிடிவி தினகரன் கேள்வி எழு்ப்பியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு
அதிமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழக மக்களை மட்டுமில்லாமல் இந்தியாவையே அதிர்ச்சி அடையவைத்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரதித்த அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்டது.அதில், துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான 17 காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
undefined
பரிந்துரை மீதான நடவடிக்கை என்ன.?
இந்தநிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று 5 வது ஆண்டையொட்டி உயரிழந்தவர்களுக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததன் நினைவு நாள் இன்று. கடந்த பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற இந்த படுபாதக துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், அதில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஸ்டாலின் தயங்குவது ஏன்.?
துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும், உத்தரவை செயல்படுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 13 பேரின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே உயிர் நீத்தோரின் தியாகத்துக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்பதை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்