ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும் படிவங்களும் சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. கறுப்பு பணத்தை வெளிக்கொணரவே ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பாஜகவின் வாதம் முறியடிக்கப்பட்டது.
ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும் படிவங்களும் சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும் படிவங்களும் சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. கறுப்பு பணத்தை வெளிக்கொணரவே ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பாஜகவின் வாதம் முறியடிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- 500 சந்தேகங்கள்! 1000 மர்மங்கள்! 2000 பிழைகள்! இதை மறைக்கவே இந்த நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.!
சாதாரண மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் இல்லை. 2016ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டனர். தினசரி சில்லறை பரிமாற்றத்திற்கு அவை பயனற்றவை. அப்படியென்றால் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தியது யார்? என்பது உங்களுக்கே தெரியும்.
இதையும் படிங்க;- எதிர்பார்த்தது போலவே நடந்துடிச்சு! மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகமாகலாம்! பாஜக அரசை விளாசும் ப.சிதம்பரம்.!
கறுப்பு பணத்தை பதுக்குவோருக்கு ரூ.2000 நோட்டு எளிதாக உதவியது. ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் நோட்டுகளை மாற்ற சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. கறுப்பு பணத்தை வேரறுக்கும் அரசின் குறிக்கோளுக்கு இவ்வளவுதான் காரணம். 2016ல் ரூ.2000 நோட்டு அறிமுகம் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வாபஸ் பெறப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.