குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆவினில் தண்ணீர் பாட்டில் விற்பனை
அதிமுக அரசு சார்பில் 2013 ஆம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. போக்குவரத்து கழகம் சார்பில் பணிமனைகளில் ஒரு லிட்டர் ரூ.10-க்குவிற்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்தார். குடிநீரை இலவசமாக வழங்காமல் அரசே விற்பதாக விமர்சித்தார். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த திட்டம் திடீரென 2020ஆம் ஆண்டு திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. தினமும் ஒருலட்சம் தண்ணீர் பாட்டில்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களை தயாரித்து விற்க திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
undefined
தண்ணீர் விற்பனை செய்வதற்கு போராடினீங்க
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதவில், ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.
புதிய திட்டத்தை கை விடுங்கள்
குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடி நீர் வினியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
சட்டவிரோத மதுபாரில் திமுக நிர்வாகிகள் வன்முறை.! சைலன்ட் மோடில் போலீஸ்- இபிஎஸ் ஆவேசம்