மது பிரியர்களால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு.! திமுக அரசு கண்மூடித்தனமாக வேடிக்கை பார்ப்பதா.?டிடிவி தினகரன் ஆவேசம்

Published : Aug 02, 2023, 12:10 PM IST
மது பிரியர்களால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு.! திமுக அரசு கண்மூடித்தனமாக வேடிக்கை பார்ப்பதா.?டிடிவி தினகரன் ஆவேசம்

சுருக்கம்

மது விற்பனையை மட்டும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கும் விடியா அரசு, அதில் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   

டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல்

டாஸ்மாக் மது கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் கடை மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் டாஸ்மாக் பணியாளர்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மதுவாங்கும்போது தகராறில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் சிலர் கும்பலாகச் சேர்ந்து, டாஸ்மாக் விற்பனையாளரும் கழக தொழிற்சங்க உறுப்பினருமான பால்துரை, உதவி விற்பனையாளரும் கழக தொழிற்சங்க உறுப்பினருமான  பாலமுருகன் ஆகியோரை அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

வேடிக்கை பார்க்கும் திமுக அரசு

படுகாயம் அடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் மற்றும்  பார்களுக்கு வரும் மது பிரியர்களால் ஆங்காங்கே இது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்திருப்பதை திமுக அரசு கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்து வருவது ஏற்கதக்கதல்ல. மது விற்பனையை மட்டும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கும் விடியா அரசு, அதில் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

இனியும் தாமதிக்காமல் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சீர் செய்ய தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அதே நேரத்தில் படுகாயம் அடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் இருவரும் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இபிஎஸ் கோட்டையில் கெத்து காட்டிய ஓபிஎஸ், டிடிவி.தினகரன்.. அதிர்ச்சியில் அதிமுக..!
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி