ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் அரசியல் அனாதையாகிவிட்டனர் - கே.பி.முனுசாமி காட்டம்

Published : Aug 02, 2023, 11:33 AM IST
ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் அரசியல் அனாதையாகிவிட்டனர் - கே.பி.முனுசாமி காட்டம்

சுருக்கம்

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இரண்டு பேரும் போராட்டத்தின் மூலம் அரசியல் அனாதை ஆகிவிட்டதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  அ.தி.மு.க.துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தொண்டர்கள் மிக எழுச்சியோடு இருக்கிறார்கள். தமிழகத்தில் தேர்தல் எப்போது  வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்ற வகையில் எழுச்சி உள்ளது. மதுரை என்பது அதிமுகவிற்கு செல்வாக்கு நிறைந்த மாவட்டமாகும். வருகிற 20ம் தேதி மதுரையில் நடைபெறும்  மாநாட்டிற்கு பின் தமிழகத்தில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும். 

பேருந்து நிலையத்தில் எல்லை மீறிய இளம் ஜோடி; வீடியோ வெளியாகி பரபரப்பு

மகளிர் உரிமை தொகை பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உறுப்பினர் சேர்க்கைக்கு பொது மக்களை தி.மு.க.வினர் மிரட்டுகின்றனர். ஆனால் நாங்கள் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமே உறுப்பினராக சேர்த்துக்கொள்கிறோம். மதுரை மாநாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இரண்டு தலைவர்களும் அனாதையாகி விட்டார்கள் என்று தெரிகிறது. 

தூங்கிக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; வயல்வெளியில் தூக்கி வீசப்பட்ட இருவர் - ஒருவர் பலி

ஜெயலலிதா மறைவுக்கு பின், `தர்மயுத்தம்' நடத்திய ஓ.பன்னீ்ர்செல்வம் தற்போது டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொடநாடு பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இவர்கள் நடத்துகின்ற போராட்டம் திமுகவிற்கு எதிராக தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!