அதிமுகவின் பெயர் மற்றும் கட்சி கொடியை ஓபிஎஸ் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என பல பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற சட்ட போராட்டத்தில் மாறி, மாறி உத்தரவுகள் வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்த தீர்ப்பை தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அதிமுக கொடி மற்றும் பெயரை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத திமுக அரசு கண்டித்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக பெயர் மற்றும் கொடிகளை பயன்படுத்தினர்.
இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்த கட்டமாக ஓ.பன்னீர் செல்வம் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளது. தங்களது கட்சி கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்த இருப்பதாக தெரிகிறது. ஒரு சில நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
எதிர்பாராத ட்விஸ்ட்.. டிடிவி.தினகரன் காலில் விழுந்த ஓ.ராஜா.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..