மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தம்..! வேதனையில் விவசாயிகள்- அரசுக்கு கோரிக்கை விடுக்கும் டிடிவி தினகரன்

By Ajmal KhanFirst Published Jan 29, 2023, 12:33 PM IST
Highlights

மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது, விவசாயிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மேட்டூர் அணை- தண்ணீர் நிறுத்தம்

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையானது கடந்த ஆண்டு மட்டும் 3 முறை நிரம்பியது. இந்தநிலையில் காவிரி பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நேற்று மாலையோடு  நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது குடிநீருக்கான தண்ணீர் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக கால தாமதமாக சம்பா சாகுபடி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை மேலும் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விவசாயிகள் பாதிப்பு

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை. இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக ஜனவரி 28ஆம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது,

டாஸ்மாக் பணியாளருக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்தது ஏன்..? சமூகவலைதளத்தில் விமர்சனம்- பதிலடி கொடுத்த ஆட்சியர்

15 நாட்களுக்கு திறக்க வேண்டும்

டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பா சாகுபடி நிறைவடையாத நிலையில், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை- வானிலை மையம்

click me!