பணத்தை விதைத்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜக.! தமிழையும், தமிழ்நாட்டையும் அழிக்கிறது- வைகோ ஆவேசம்

Published : Jan 29, 2023, 11:01 AM IST
பணத்தை விதைத்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜக.! தமிழையும், தமிழ்நாட்டையும் அழிக்கிறது- வைகோ ஆவேசம்

சுருக்கம்

பணத்தை விதைத்து பாஜக தமிழகத்தை கையகப்படுத்தலாம் என நினைப்பதாக குற்றம்சாட்டிய மதிமுக பொதுச்செயலாளர் வகோ,  தமிழையும், தமிழ்நாட்டையும் அழிக்க முனைவதாக தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் சேது சமுத்திர திட்டம்

நெல்லை பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரி மாணவ மன்ற நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  சேது சமுத்திர திட்டம் என்பது இந்த நாட்டுக்கு தேவையான திட்டம், அறிஞர் அண்ணா இதற்காக குரல் கொடுத்தார். இந்த திட்டத்திற்காக நான் நடை பயணம் மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக உரையாற்றியதாக குறிப்பிட்டார்.  தென் மாவட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதோடு தமிழகத்தின் பொருளாதாரத்தையும் இந்த சேது சமுத்திர திட்டம்  உயர்த்தும்  என நம்பிக்கை தெரிவித்தார். 

அதிமுகவை ஆட்டிப்படைக்கும் பாஜக.!மோடி, அமித்ஷா கை காட்டுபவர்களுக்கே இரட்டை இலை சின்னம்- திருநாவுக்கரசர் அதிரடி

தமிழ்நாட்டை அழிக்க பாஜக முயற்சி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளுக்கு நாள் மாற்றி, மாற்றி பேசி வருவதாக தெரிவித்தார்.  பாஜக பணத்தை விதைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் கொடியேற்றி வருகிறது. தமிழகத்திலும் பணத்தை விதைத்து கையகப்படுத்தலாம் என நினைத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.. திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் மத்திய அரசு விரோதமான அரசாக செயல்படுவதுடன் இந்துத்துவாவை திணிக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் பாஜக மக்கள் விரோத போக்கை நடந்து கொண்டிருக்கிறது தமிழக மக்களுக்கும் தமிழினத்திற்கும் விரோதமாக செயல்பட்டு வருகிறது தமிழையும் தமிழ்நாட்டையும் அழிக்க பாஜக பார்பதாக அவர் வைகோ விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்.!எடப்பாடி அணிக்கு தான் எங்கள் ஆதரவு.! ஓபிஎஸ் அணியை அதிர்ச்சி அடையவைத்த கூட்டணி கட்சி தலைவர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!