எடப்பாடிக்கு வக்காலத்து வாங்கி ஸ்டாலினை எகிறியடித்த TTV தினகரன். அதிமுக-அமமுக இணைவது குறித்து அதிரடி கருத்து.

Published : Feb 24, 2021, 02:17 PM IST
எடப்பாடிக்கு வக்காலத்து வாங்கி ஸ்டாலினை எகிறியடித்த TTV தினகரன். அதிமுக-அமமுக இணைவது குறித்து அதிரடி கருத்து.

சுருக்கம்

இந்தியாவிலேயே ஊழலில் முதன்மையானவர் எடப்பாடி பழனிச்சாமி என்று ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக என்று  தெரிவித்தார் .  

அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி இராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

ஜெயலலிதாவின் எண்ணப்படி 100 ஆண்டிற்கும் ஆட்சி நீடிக்க ஜெயலலிதாவின் உடன் பிறப்புகள் ஒன்றிணையவேண்டும் என்கிற  சசிகலாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி டி வி தினகரன், அவர் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களை குறிப்பிடவில்லை என்றார். சசிகலா அமமுகவிற்கு  ஆதரவு தருவாரா என்கிற  கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், அது குறித்து சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். 

இந்தியாவிலேயே ஊழலில் முதன்மையானவர் எடப்பாடி பழனிச்சாமி என்று ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக என்று  தெரிவித்தார். நாளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  பொதுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். அதிமுகவில் அமமுக இணையும் என்று காங்கிரஸ் கட்சியயை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என்றும் தினகரன் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி