நாம் ஒன்றுபட்டு ஆட்சி அமைக்க வேண்டும், பொது எதிரி திமுகதான்.. சசிகலா உறுதி.

Published : Feb 24, 2021, 02:00 PM IST
நாம் ஒன்றுபட்டு ஆட்சி அமைக்க வேண்டும், பொது எதிரி திமுகதான்.. சசிகலா உறுதி.

சுருக்கம்

நாம்  அனைவரும் ஒன்றுபட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கூறியபடி அவருக்கு பின்னும் நூறு ஆண்டு காலம் ஆட்சி இருக்கும் என்ற கருத்தை மெய்பிக்கும் வகையில் வருகின்ற சட்டமன்ற  தேர்தலில் ஒன்றுபட்டு  மீண்டும் ஆட்சி அமைக்க கழக தொண்டர்கள்  பாடுபட வேண்டும் என தெரிவித்தார். 

நமது பொது எதிரி திமுகதான் அதை வீழ்த்த இன்றைய நாளில் நாம் உறுதியேற்போம் என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தான் கொரோனாவில் இருந்தபோது பொதுமக்களின் வேண்டுதலால் நலம் பெற்று தமிழகம் திரும்பியதாகவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களாகிய நாம்  அனைவரும் ஒன்றுபட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கூறியபடி அவருக்கு பின்னும் நூறு ஆண்டு காலம் ஆட்சி  இருக்கும் என்ற கருத்தை மெய்பிக்கும் வகையில் வருகின்ற சட்டமன்ற  தேர்தலில் ஒன்றுபட்டு  மீண்டும் ஆட்சி அமைக்க கழக தொண்டர்கள்  பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொண்டர்கள் செய்வார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது என்ற அவர், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். அவை நடக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தொண்டர்கள்  ஆகிய உங்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் எனவும் சசிகலா தெரிவித்தார்.நமது பொது எதிரி திமுகதான் அதனை தோற்கடிக்க நாம் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என்றார்.
 

PREV
click me!

Recommended Stories

செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு
மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!