எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து யாரால் முதல்வரானார் என்பது உலகிற்கே தெரியும்.. மீண்டும் சீனாக சீனுக்கு வரும் TTV.!

By vinoth kumarFirst Published Nov 6, 2021, 1:31 PM IST
Highlights

கடன்பட்டார் நெஞ்சம் பதைபதைக்கும், எடப்பாடி பழனிசாமியும் அதே நிலைமையில் தான் உள்ளார். எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி இருந்தாலும் தற்போது பலவீனத்தால் தடுமாற்றம் அடைந்து பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி பலவீனமாக இருப்பதால் பதற்றத்தில் தடுமாறி சசிகலா குறித்து அவதூறாக பேசுகிறார். அவரை விமர்சிக்க விரும்பவில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று முதல் மூன்று நாள்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். 

இதையும் படிங்க;- 126 ஆண்டுகால உரிமை பறிபோனதா? முதல்வர்‌ மவுனம்‌ காப்பது ஏன்‌? தினகரன் கேள்வியால் திக்குமுக்காடும் திமுக..!

தொடர்ந்து, நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வருகின்ற நகராட்சி, மாநகராட்சித் தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவுக்கு வரவேற்பு கொடுப்பது உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க;- வீர வசனம் பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா? டிடிவி கேட்ட ஒரே கேள்வி.. திக்குமுக்காடிய திமுக..!

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- மண்டல வாரியாக நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கழக நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தகளின் பின்னடைவு என்ன என்பது தமக்கே தெரியும். தேர்தல் வெற்றி தோல்வி என்பதையெல்லாம் கடந்து அதிமுகவை மீட்பதற்குதான் அமமுக தொடங்கப்பட்டது. அதிமுக மீட்க சசிகலா சட்ட ரீதியாக போராடுகிறார். புரட்சித்தாய் சசிகலாவுக்கு, கழகத்தினர் மற்றும் மக்களின் ஆதரவும் எழுச்சியும் தொடர்கிறது. தொண்டர்கள், நிர்வாகிகள் சோர்வடையாமல் மேலும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- இன்னும் ஓபிஎஸ் எங்க ஆள்தான்.. ஒன்று சேரும் பழைய டீம்.. டிடிவி.தினகரன் அதிரடி பேட்டி..!

தொண்டர்கள் அனைவரும் தங்களுடனே உள்ளனர். சில சுயநலவாதிகள் வெளியேறி இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நிதானமாக பேசக்கூடியவர் என ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். ஓபிஎஸ் எதையும் சிந்தித்து முடிவு எடுக்கக் கூடியவர் என்பதை தான் நான் அன்றைக்கு கூறினேன். கடன்பட்டார் நெஞ்சம் பதைபதைக்கும், எடப்பாடி பழனிசாமியும் அதே நிலைமையில் தான் உள்ளார். எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி இருந்தாலும் தற்போது பலவீனத்தால் தடுமாற்றம் அடைந்து பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி தவழ்ந்ததை அனைவரும் அறிவர். யாரால் முதல்வரானார் என்பது உலகிற்கே தெரியும் என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சித்தார். 


இதையும் படிங்க;- இதை திமுக அரசு உணருமா? முக்கிய பிரச்சனையை கையில் எடுத்த டிடிவி. தினகரன்..!

துரோகத்தையும், நன்றி மறந்த தன்மையையும் ராஜதந்திரம் என நினைக்கிறார்கள். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லாமல் இருக்கலாம். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகம் தெரிந்தது தான். திமுக ஆட்சிக்கு 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். அதன் பின்னரே விமர்சனம் தெரிவிக்கலாம் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

click me!