தமிழநாடு உங்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா.?? பாஜகவை போட்டு பொளக்கும் கஸ்தூரி.

Published : Nov 06, 2021, 01:26 PM IST
தமிழநாடு உங்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா.?? பாஜகவை போட்டு பொளக்கும் கஸ்தூரி.

சுருக்கம்

தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியான திமுக ஆள்கிறது, எனவே இப்படி அவர்கள் ஒரு சாக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் முன்னேறிய மாநிலமா? பின்தங்கிய மாநிலமா? என்பதை மத்திய பாஜக அரசு தான் சொல்ல வேண்டும். பின்தங்கிய மாநிலம் என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து  மத்திய பாஜக அரசு அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கி கொண்டே இருக்கும், ஆனால் முன்னேறிய மாநிலங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு கப்பம் செலுத்தி கொண்டு இருக்க வேண்டுமா?

முன்னேறிய மாநிலங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு கப்பம் கட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளதுடன், கர்நாடக மாநிலம் பின்தங்கிய மாநிலமா? என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு முக்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட  வரி வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது பெருமளவில் தமிழத்துக்கு சேரவேண்டிய  நிலுவைத் தொகையை மத்திய அரசு சரிவர வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும் பாஜக- அதிமுக கூட்டணி கட்சி என்பதால், கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் பெரிய அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மத்திய அரசு மாநிலத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தவறாது வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 20,000 கோடி வரை நிலுவைத்தொகை வர வேண்டியுள்ளது என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வரி வருவாய் குறைந்ததற்கு அரசின் செயலின்மையே காரணம் என்றும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரி வருவாய் அதிகமாக உள்ளது. ஆனால் இந்த மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி குறைவாகவே வழங்கப்படுகிறது, குறிப்பாக  இந்த மாநிலங்களில் 65 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மாநில சொந்த வரி வருவாய் பயன்படுத்துகிறது. மீதமுள்ள 35 முதல் 25 சதவீத தொகை மாநிலத்தில் இருந்து கிடைத்த வரி வருவாய் மூலம் மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை தமிழகத்திற்கு ஜிஎஸ்டி மற்றும் இதர வரி வருவாய் ரூபாய் 20, 000 கோடி வரை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தமிழ்நாடு அரசுக்கு  மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் 20 ஆயிரத்து 33 கோடி உள்ளது எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

ஆனால் தமிழகத்தில் இருந்து பெறப்படுகிற வரி வருவாய், பின்தங்கிய மாநிலங்களுக்கு வழங்குவதாக கூறி, மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு நிதியை செலவிட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடிகையும், அரசியல் குறித்து வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய வருமான கஸ்தூரி மத்திய அரசின் இச்செயலை வன்மையாக கண்டித்து கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேபேட்டியின் போது,  ஒரே நாடு என்று சொல்லிக்கொள்கிற மத்திய பாஜக அரசு, முன்னேறிய மாநிலம் என தமிழ்நாட்டுக்கு குறைவான நிதி ஒதுக்குவதும், பின்தங்கிய மாநிலம் என கூறி உத்தரப் பிரதேசத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதையுப் எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய பாஜக அரசின் புரட்டுகளில் இதுவும் ஒன்று, எனவே இதை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன், உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்கிறது, தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியான திமுக ஆள்கிறது, எனவே இப்படி அவர்கள் ஒரு சாக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் முன்னேறிய மாநிலமா? பின்தங்கிய மாநிலமா? என்பதை மத்திய பாஜக அரசு தான் சொல்ல வேண்டும். பின்தங்கிய மாநிலம் என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து  மத்திய பாஜக அரசு அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கி கொண்டே இருக்கும், ஆனால் முன்னேறிய மாநிலங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு கப்பம் செலுத்தி கொண்டு இருக்க வேண்டுமா? என காட்டமாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல கோயில் காணிக்கை நகைகளை உருக்கி வங்கிகளில் வைத்து வட்டி பெரும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டையும் அவர் கண்டித்துள்ளார், கோயிலில் காணிக்கையாக கிடைக்கும் தங்க நகைகளை மொத்தமாக உருக்கி தங்க கட்டியாக வங்கி லாக்கரில் வைத்து வருமானம் பெறுவது நல்ல விஷயம் தான் ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ளது ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு கோயிலில் காணிக்கையாக கிடைக்கக்கூடிய நகையை உருக்கி எடுத்து அதன் மூலம் வரும் வருமானத்தை அந்த கோயில் பணிகளுக்கு மட்டும் தான் செலவு செய்ய வேண்டுமே தவிர அந்த நிதியை தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களுக்கும் செலவிட முயற்சி செய்வதை கண்டிக்கத்தக்கது என விமர்சித்துள்ளார். மொத்தத்தில் கோயில் நிர்வாகத்தில் இந்து அறநிலையத்துறை சம்பந்தப்படுவதே தவறு என அவர் கூறியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!