பிஜேபியின் B டீம் என நிரூபித்தால் கட்சியைக் கலைச்சுட்டு போயிடுறேன்.. திமுக தான் பிஜேபியின் மெயின் டீம்: சீமான்

By Thiraviaraj RMFirst Published Nov 6, 2021, 1:08 PM IST
Highlights

நான் பிஜேபியின் பி டீம் என்கிறார்கள். அதை நிரூபித்தால் நான் கட்சியை களைத்து விட்டு போகிறேன். ஆனால் திமுகதான் பிஜேபியின் பி.டீம். 

பிஜேபியின் 'B" டீம் என நிரூபித்தால் கட்சியைக் கலைச்சுட்டு போயிடுறேன்..! ஆனால் திமுக தான் பிஜேபியின் மெயின் டீம் இது தெரியுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ‘’எனது சொத்து பட்டியலை வெளியிட்டது போல் அதற்குண்டான பத்திரங்களை வெளியிடுங்கள். அவதூறுக்கு பிறந்த அவதூறுகள். நான் பிஜேபியின் பி டீம் என்கிறார்கள். அதை நிரூபித்தால் நான் கட்சியை களைத்து விட்டு போகிறேன். ஆனால் திமுகதான் பிஜேபியின் பி.டீம். சோறு வைக்கும்போது ஒரு ஓரத்தில் உப்பு வைப்பார்கள். உப்பை மட்டும் தின்றுவிட்டு உவர்க்கிறது என்றால் என்ன செய்ய முடியும்? மகாவீர் ஜெயந்திக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? 

மார்வாடிகள் இருக்கும் பக்கத்தில் கறிக்கடைகளை திறக்கக் கூடாது என்று சட்டம் போடுகிறார்கள். எவ்வளவு திமிர். என் நாட்டுக்குள் அவனுக்கு ஒரு நாடு என பட்டையம் போட்டு கொடுக்கிறீர்களா? திமுகவிற்கு ஓட்டுப் போட்டாயா? நீ நேராக சொர்க்கத்துக்கு போ. உதயநிதிக்கு ஓட்டுப் போட்டாயா? வா வா உன்னைத்தான் தேடி கொண்டிருக்கிறேன். நீ சொர்க்கத்துக்குப் போ... ஸ்டாலின், உதயநிதிக்கு ஓட்டு போடாமல் சீமானுக்கு ஓட்டு போட்டது யார் யார்? நீங்கள் எல்லாம் நரகத்திற்குப் போங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட போகிறாரா?

 நான் பிஜேபியின் பி டீம் என்றால் திமுகவின் பெயர் என்ன?  லயோலா கல்லூரியில் இந்துக்கள் பணியாற்றவில்லை. கிறிஸ்தவ கல்லூரியில் இந்துக்கள் பணியாற்ற வில்லையா? அப்படி எல்லாம் இருக்கும் போது கொளத்தூரில் உங்கள் தொகுதியில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறந்திருக்கிறீர்கள். ஆனால் அங்கு இந்துக்கள் மட்டும் தான் பணியாற்ற முடியும் என்று சட்டம் இயற்றுகிறீர்கள். இந்துக்கள் தான் பேராசிரியராக பணியாற்றும் முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் கோட்பாடு. அதைத்தான் திமுக செய்திருக்கிறது

சமூக நீதியை கண்காணிக்க ஒரு குழு போட்டு இருக்கிறீர்களே... இதில் மட்டும் இந்துக்கள் மட்டும்தான் பேராசிரியராக பணியாற்ற வேண்டும் என்று சட்டம் போட்டதை அந்தக் குழு கண்காணிக்கவில்லையே ஏன்? இந்த நாட்டில் ஆகச்சிறந்த சிறுபான்மை எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா தான். ஒரு சீட்டை கொடுத்துவிட்டு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் வாக்குகளையும் திமுக பெறுகிறது. 

நான் பதிமூன்று பேருக்கு சீட் கொடுத்தேன். ஆனால் நான் உங்களுக்கு எதிரியாக தெரிகிறேன். அரேபியாவில் பிறந்த நபிகள் நாயகத்தை நீங்கள் எப்படி இறை தூதராக ஏற்றுக் கொள்கிறார்களோ அதேபோல் வேறு மண்ணில் பிறந்த பிரபாகரனை நான் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் என்று முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்கள் கூறினார்கள். அன்றே சொன்னார் இருவரும் ஒருநாள் கட்டிப்பிடித்து ஒன்றாக இருப்பார்கள் என்று.

பழனிபாபா சொல் சொல்கிறார்... மானமுள்ள எவனாவது திமுகவுக்கு ஓட்டுப்போடுவானா என கேட்கிறார். அவர் பேசியது ஆதாரமாக இருக்கிறது. முருகனை கும்பிட்டால் தான் நாம் தமிழர் கட்சியில் இருக்கமுடியும் என்று நாங்கள் எந்த விதியும் போடவில்லை. எனக்கு ரூ.250 கோடி வந்து விட்டது என்று சொல்கிறார்கள். அது எங்கிருந்து வந்தது எனச் சொல்ல முடியுமா? இதுதான் உங்கள் புலனாய்வின் லட்சணமா?’’ என அவர் கேள்வி எழுப்பினார். 

click me!