எடப்பாடியின் யார்க்கர் பவுலிங்கில் கிளின் போல்டான டி.டி.வி, அமமுகவில் விழுந்த முதல் விக்கெட்!*

By Asianet TamilFirst Published Mar 10, 2021, 3:40 PM IST
Highlights

அமமுக கட்சியின் திருச்சி நகர கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில்  இணைந்துள்ளார். இது தினகரன் கட்சியிலிருந்து வெளியேறிய முதல் விக்கெட்.

அதிமுகவுடன் இணைப்பது  குறித்து கேள்வி எழும்போது ,எங்கள் தலைமையில் இருக்கும்  கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்போம் என  டி.டி.வி தினகரன் தெரிவித்தார். திடீரென்று சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவரது வாய்ஸ் நன்றாக குறைய துவங்கியது. அதிமுகவினரும் ஒருபோதும் அமமுகவை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாய் தெரிவித்து விட்டனர். இப்படியிருக்க டிடிவி, மக்கள் நீதி மய்யத்துடன்  கூட்டணி அமைப்பது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. இதனால், சட்டமன்ற தேர்தலில் தினகரன் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது. 

கட்சியின் ஆணிவேராக இருந்த சசிகலாவே இரவோடு இரவாக அரசியலை விட்டு ஒருங்கவதாக  அறிவித்துவிட்டார். இப்பொழுது யாரை நம்பி கட்சி நடத்த போகிறார் என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறார் தினகரன். டிடிவியை நம்பி பதவியை இழந்த  18 எம்.எல்.ஏக்களுக்கு வெறும் ஏமாற்றம்  மட்டும் தான் மிஞ்சியது . மேலும் டிடிவி குறிப்பிடும் ஸ்லீப்பர் செல்ஸ் என்பவர்கள் அமமுக கட்சியில் தான் இருக்கிறார்கள் என்று அவருக்கே தெரியாமல் இருக்கிறது. இதில் அவர்களை அம்மாவின் உண்மை தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்  என்று அவ்வவ்போது மார்தட்டி கொள்கிறார் . அந்த உண்மை தொண்டர்களின் முதல் விக்கெட் தான் இன்று காலையில் அதிமுகவில் வந்து இணைந்த சீனிவாசன். 

டிடிவியை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று 18 லிருந்து இன்றைக்கு 1 வந்துவிட்டது, அடுத்து ஒவ்வொன்றாக வந்துவிடும் என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் கேலி செய்கிறார்கள். டிடிவிக்கு முன்னாடி உண்மை தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்து கொண்டு தைரியமாக இருப்பதுபோல் நடித்தாலும், பின்னாடி அதிமுகவுடன் தங்களை எப்படி இணைத்து கொள்வது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன . தினகரன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எடப்பாடிக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது. வந்தா ராஜாவாக தான் வருவேன் என்று கூறியவர் இப்போது கூஜா தூக்க கூட ஆளில்லாமல் போய்விடுமோ என்று குழப்பத்தில் இருக்கிறார். இந்த நிலைமையில் இருந்தால் நம்ம பொழப்பு ஓடாது என்று சுதாரித்து கொண்டு டிடிவி அணியின் முதல் விக்கெட்டாக சீனிவாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவுடன் தன்னை இணைத்து கொண்டார். 

எங்கள் பிரதான எதிரி திராவிட முன்னேற்ற கழகம்  தான் என்றும், அதனை ஒருபோதும் ஆட்சிக்கு வர விடமாட்டோம் என்று கூறியவர், தற்போது அம்மாவின் உண்மை தொண்டர்களில் ஒருவர் அதிமுகவுடன் இணைந்ததும் அடுத்து யார் செல்வார் ? எப்போது செல்வார் ? என்ற அச்சத்தில் இருக்கிறார்.

 

click me!