இஸ்லாமிய- தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளை மொத்தமாக அள்ள ப்ளான்... டி.டி.வி.தினகரன் அசத்தல்..!

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2021, 3:39 PM IST
Highlights

முஸ்லீம் வாக்குகளையும், சிறு சிறு கட்சிகளை இணைத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வாக்குகளையும் அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளார் டி.டி.வி.தினகரன். 

2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கும் மக்களரசு கட்சிக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தமாகி இருக்கிறது.  இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அமமுக தலைமையிலான கூட்டணியில்தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அமமுகவில் கூட்டணி அமைக்க பல்வேறு தரப்பினரும் முன் வருகின்றனர்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், மக்களரசு கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் மக்களரசு கட்சிக்கும் இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் மக்கள் அரசு கட்சி தமிழ்நாட்டில் திருத்துறைப்பூண்டி தனித் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது’’என அறிவித்துள்ளார். இதற்கு மக்கள் அரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் என்ற அருள்மொழிவர்மன் உடன் படுவதாக கையெழுத்திட்டுள்ளார்.

அதேபோல் தொகுதி விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சிக்கும் திருவிடைமருதூர்(தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமமுகவுடன்ஓவைசி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதன் மூலம் முஸ்லீம் வாக்குகளையும், சிறு சிறு கட்சிகளை இணைத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வாக்குகளையும் அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளார் டி.டி.வி.தினகரன். 

click me!