என் மீது பாஜக சாயம் பூச முயற்சிப்பது நடக்காது... ரஜினிகாந்த் அதிர்ச்சி பேட்டி..!

Published : Nov 08, 2019, 11:46 AM IST
என் மீது பாஜக சாயம் பூச முயற்சிப்பது நடக்காது... ரஜினிகாந்த் அதிர்ச்சி பேட்டி..!

சுருக்கம்

பாஜக எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.  நான் பாஜகவை சேர்ந்தவன் என்றும், பாஜக தலைவராக வருவேன் என்றும் நிறுவ முயற்சிக்கிறார்கள். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சினிமா அலுவலகத்தில் பாலச்சந்தருக்கு சிலை  திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நீங்கள் பாஜக தலைவராக வரவுள்ளதாக கூறப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், எனக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது. தம்மை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது அது நடக்காது.

 திருவள்ளுவருக்கு காவி அணி உடை அணிவித்தது. அவர்களது தனிப்பட்ட விருப்பம். எனக்கும் திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூச மேற்கொள்ளும் முயற்சியிலிருந்து தப்பி விடுவோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.  பாஜக எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.  நான் பாஜகவை சேர்ந்தவன் என்றும், பாஜக தலைவராக வருவேன் என்றும் நிறுவ முயற்சிக்கிறார்கள்.  சிறப்பு விருது அறிவித்தவர்களுக்கு நன்றி’’என தெரிவித்தார். இது பாஜக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!