2 நாட்களில் மு.க.ஸ்டாலின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும்... உ.பி.க்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மாஃபா பாண்டியராஜன்..!

By vinoth kumarFirst Published Nov 8, 2019, 11:18 AM IST
Highlights

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது பற்றி 2 நாட்களில் ஆதாரங்களுடன் பதிலளிக்கப்படும் என்றார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா விவகாரம் தொடர்பாக 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிரடியாக கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பான விவாதம் மற்றும் அது தொடர்பாக அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது சர்ச்சை கருத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் உருவ பொம்மையையும் எரித்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது என்றும் அவர் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது பற்றி 2 நாட்களில் ஆதாரங்களுடன் பதிலளிக்கப்படும் என்றார். 

எதற்காக கைதானேன் என்பதை மு.க.ஸ்டாலினே ஆதாரங்களை வெளியிடலாமே? மிசா சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரண குறிப்புக்கள் ஏதும் இல்லை. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது பற்றி அதிமுக கேள்வி எழுப்பவில்லை. மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பொன்முடி கூறியதால் தான் இந்த பிரச்சனையே ஏற்பட்டது என்றார். 

click me!