ராமதாசை பார்த்ததால் தோல்வி..! கேப்டனை சந்தித்ததால் வெற்றி... எடப்பாடியை சென்டிமெண்டாக தாக்கிய பிரேமலதா..!

By vinoth kumarFirst Published Nov 8, 2019, 10:39 AM IST
Highlights

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் விக்கிரவாண்டியில் கேப்டன் பிரச்சாரம் செய்ததை எடப்பாடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக அதிமுக முதலில் சென்று சந்தித்தது ராமதாசை, ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக முதலில் வந்து சந்தித்தது கேப்டனை. நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது தோல்வி, இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தது. அந்த வகையில் கேப்டன் எவ்வளவு ராசிக்காரர் என்று எடப்பாடி புகழ்ந்தார்.
 
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமி முதலில் ராமதாசை சென்று சந்தித்ததால் தான் தோல்வி அடைந்தார்கள் என்கிற ரீதியில் பிரேமலதா பேசியுள்ளார்.

சென்னையில் நேற்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முதலில் முக்கிய மாவட்டச் செயலாளர்கள் சிலர் பேச அனுமதிக்கப்பட்டனர். இறுதியாக கேப்டன் பேசினார். அதற்கு முன்பாக பிரேமலதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேசி வருகிறோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிமுக தரப்பில் இருந்து நம்மிடம் நன்றாக பேசுகிறார்கள். தேமுதிகவின் எதிர்பார்ப்பை தெளிவாக அதிமுகவிடம் கூறிவிட்டோம். நாடாளுமன்ற தேர்தலை போல் கொடுத்ததை வாங்கிக் கொள்ளப்போவதில்லை. எடப்பாடி பழனிசாமியும் தேமுதிக மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் விக்கிரவாண்டியில் கேப்டன் பிரச்சாரம் செய்ததை எடப்பாடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக அதிமுக முதலில் சென்று சந்தித்தது ராமதாசை, ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக முதலில் வந்து சந்தித்தது கேப்டனை. நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது தோல்வி, இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தது. அந்த வகையில் கேப்டன் எவ்வளவு ராசிக்காரர் என்று எடப்பாடி புகழ்ந்தார்.

எனவே உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் நம்மை தான் முதலில் வந்து எடப்பாடி பார்ப்பார். எனவே வேட்பாளர் தேர்வில் நம் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். விசுவாசம் மிக்கவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். பணத்தை செலவு செய்யும் தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!