
அதிமுக அமைச்சர்கள் யாரும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவதில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றஞ்சாட்டி உள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது என தமிழக மக்களின் பிரச்சசனைகளில் கவனம் செலுத்தாமல், அதிமுக அமைச்சர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் தான் கவனம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்பது வெறும் கற்பனையே என்று குறிப்பிட்ட அவர், இதுவரை பெறாத வெற்றியை ஆர்.கே.நகரில் திமுக பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.