முரசொலி இணையதளம் முடக்கம் - திமுகவினர் கடும் அதிர்ச்சி

First Published Mar 20, 2017, 9:14 AM IST
Highlights
DMK official daily newspaper of the web disabled rubadub


திமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லிஜியன் என்ற குழுமம் இணையதளத்தை முடக்கியுள்ளது. அதில் நாட்டைக் காக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களு தடை விதிக்க வேண்டும் என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட தளத்தை மீட்க திமுகவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடந்ததாகவும், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க.வுக்கு செல்லும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன. 

இந்தச் சூழலில் நாட்டை காக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முரசொலி நாளிதழின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதால் இதன் பின்னணியில் பா.ஜ.க.வுக்கு எதிரான அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

click me!