"அண்ணாமலை பாவம்.. பொய் கனவாது காணட்டும்" அண்ணாமலையை அட்டாக் செய்த திருநாவுக்கரசர் எம்.பி !

By Raghupati RFirst Published Jun 8, 2022, 4:35 PM IST
Highlights

Annamalai : மக்களைப் பிளவுப்படுத்தும் விதத்தில் ஆதீனகர்த்தாக்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட அமைப்பினர் பேசக்கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது, ‘திருச்சியில் கூடியுள்ள கூட்டம் சரித்திரம் வாய்ந்த பொதுக்கூட்டம்.2024ல் தமிழகத்தில் 25 எம்பிகள் கொண்டு வருவோம் என்று சொல்லி வருகிறோம் ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் 39 எம்பிகள் வருவார்கள். திமுக சொல்வது திராவிட மாடல் என்பது கபட நாடகம். திமுக ஆட்சியில் லஞ்சம்,கொலை,கொள்ளை,என தமிழகம் பின்னோக்கி ஓடுவதில் தான் நம்பர்.

1 திமுக ஆட்சி சாதாரணமான மக்களுக்கு எதிரானது.திமுக சாதி பின்புலத்தில் அரசியல் செய்கிறது என்றார். ஹிந்தி கற்றால் பானிபூரிகாரனாக மாறுவோம் என திமுக கீழ்தரமான சிந்தனை கொண்டுள்ளது. தமிழகத்தில்  முதல்வர்,நிதியமைச்சர் வாய்க்கு வந்தது எல்லாம் ஜி.எஸ்.டி விவகாரத்தில் பேசுகிறார்கள். திராவிட மாடல் அரசு னு பேசும் அமைச்சர்களுக்கு கூட ஜி.எஸ்.டி பற்றி தெரியாது.எல்லாவற்றிக்கும் எதற்க்கு எடுத்தாலும் 21 முறை திராவிட மாடல் அரசுனு முதல்வர் சொல்லியுள்ளார்’ என்று பேசினார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தடைபட்டுள்ள திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலத்தின் நிறைவுப் பணிகள் இன்னும் ஆறு மாதத்தில் முடிவடையும். பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு தரப்படும். கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள், 39  தொகுதிகளிலும் வெற்றிப் பெற முடியும் என பாஜக தலைவர் கூறியுள்ளார். 

அவர் கனவு காண யாரும் தடைபோட முடியாது. ஆனால் அது எதார்த்தத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால், பாவம் அவர் கனவாவது காணட்டும். ஆதீனங்கள் அரசியல் பேசலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை. மக்களைப் பிளவுப்படுத்தும் விதத்தில் ஆதீனகர்த்தாக்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட அமைப்பினர் பேசக்கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதி, மதம் இவற்றால் மக்களை பிளவுப்படுத்தி வன்முறையை ஏற்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது. வரம்பு மீறாமல் நாகரீகம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதத்தில் பேச வேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : ”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!

இதையும் படிங்க : G Square : ஜி ஸ்கொயர் விவகாரத்தில் இதுதான் நடந்தது.. உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் முத்துசாமி !

click me!