அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. ஆக்ஷனில் இறங்கிய இபிஎஸ்..!

By vinoth kumar  |  First Published Jun 17, 2023, 12:47 PM IST

ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருதாகவும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆதரவாக செயல்பட்டு கட்சியில் குழப்பம்  ஏற்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திருச்சி மாநகர் மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் அழகரசன் விஜய் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

Tap to resize

Latest Videos

J. அழகரசன் விஜய் (திருச்சி மாநகர் மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர் ) 

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து அழகரசன் விஜய் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருதாகவும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆதரவாக செயல்பட்டு கட்சியில் குழப்பம்  ஏற்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!