தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது என அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து டுவிட்டரில் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அதில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- அண்ணாமலையின் வலது கரத்தை நள்ளிரவில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்.!
இந்த புகாரை அடுத்து நேற்று இரவு 11 மணியளவில் சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க;- தொட்டுப் பார், சீண்டிப் பார்.... எதற்காக இப்படிப் பதறிப் பாய்கிறீர்கள் முதல்வரே? ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை
விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.
\
கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும் என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் திரு அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.
விமர்சனங்களை கருத்தால்…
இதையும் படிங்க;- கடந்த ஆட்சியில் நடந்த ஊழலக்கே இந்த நிலைனா! டாஸ்மாக் ஊழலை விசாரிச்சா ஸ்டாலின் குடும்பமே அவ்வளவு தான்! ஷியாம்