அண்ணாமலையின் வலது கரத்தை நள்ளிரவில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்.!

Published : Jun 17, 2023, 08:12 AM ISTUpdated : Jun 17, 2023, 08:19 AM IST
அண்ணாமலையின் வலது கரத்தை நள்ளிரவில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்.!

சுருக்கம்

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். சமூகவலைதளத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருபவர். 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும், வலது கரமாகவும் அறியப்படும் அக்கட்சியின் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். சமூகவலைதளத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருபவர். 

இதையும் படிங்க;- தொட்டுப் பார், சீண்டிப் பார்.... எதற்காக இப்படிப் பதறிப் பாய்கிறீர்கள் முதல்வரே? ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து டுவிட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அதில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  செந்தில் பாலாஜி கைதுக்கு முதல்வர் எதற்கு பதறுகிறார்? அடுத்த குறி ஸ்டாலினுக்கா? ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை மதுரை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!