போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.

By Ezhilarasan BabuFirst Published Feb 27, 2021, 5:01 PM IST
Highlights

ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3-வது நாளாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் பேச்சுவார்த்தையின் மூலம் வாபஸ் பெறப்பட்டது. 

ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3-வது நாளாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் பேச்சுவார்த்தையின் மூலம் வாபஸ் பெறப்பட்டது.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்நனர். 

இதனால் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயங்குவது பாதிக்கப்பட்டது. இதனால்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும்  மாணவ- மாணவிகளும், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பேருந்துகளை நம்பியிருந்த பொதுமக்கள்  கடந்த 3 தினங்களாக வாடகை கார், வேன், ஆட்டோக்களில் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருந்தனர். முன்னதாக  போக்குவரத்து அமைச்சகம் தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 25ஆம் தேதி இரவு நடத்திய பேச்சுவார்த்தையில், இடைக்கால நிவாரணம் 1000 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். மேலும்  கோரிக்கை தொடர்பாக முதல்வருடன் பேசுவதாகவும், அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இடைக்கால நிவாரணத்தை ஏற்க முடியாது என  தொழிற்சங்கத்தினர் அறிவித்ததுடன், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு போராட்டம் மூன்றாவது நாளாக இன்று நீடித்தது இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்தது. எனவே தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று  மாலை 3 மணிக்கு போக்குவரத்து தொழிலாளர்கள், தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நல இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிற்சங்கங்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்றஇந்தபேச்சுவார்த்தையில்உடன்பாடுஏற்பட்டது. 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் மூன்று நாடுகளாக நீடித்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்று இரவு முதல் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!