பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் பிரமுகர்... திமுக கூட்டணியில் இப்படியொரு ஏடாகூடமா..?

Published : Feb 27, 2021, 04:11 PM IST
பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் பிரமுகர்... திமுக கூட்டணியில் இப்படியொரு ஏடாகூடமா..?

சுருக்கம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் களமிறங்க கதர் சட்டைகளிடையே பெரும் மோதலே ஏற்பட்டுள்ளது.  

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் களமிறங்க கதர் சட்டைகளிடையே பெரும் மோதலே ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை மண்ணைக் கவ்விய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வபெருந்தகை, காங்கிரஸ் பிரமுகர் விக்டரி மோகனின் மகன் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் என பலரும் சட்ட மன்றத் தேர்தலில் சீட் கேட்டு வரிசைகட்டி நிற்கின்றனர். இவர்களில் தற்போதைய நிலவரப்படி ஜெயக்குமாருக்குத்தான் அதிக சான்ஸ் என்கிறார்கள். இது உண்மையானால் செல்வபெருந்தகை பாஜகவிற்கோ அல்லது மக்கள்நீதி மய்யத்திற்கோ ’ஜம்ப்’ ஆவார் என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஆக, மொத்தத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தொடங்கி, வேண்டிய இடங்களை பெறுவது, கிடைக்கும் இடங்களுக்கு பிரச்சனையில்லாமல் ஆட்களை தேர்வு செய்வது என காங்கிரசுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள்.
 
PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!