தோழியுடன் பேசியது ஒரு குத்தமா? பயிற்சி மருத்துவர் கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல்.. அமைச்சர் ஆதரவாளர் கைது.!

Published : Nov 21, 2021, 11:10 AM ISTUpdated : Nov 21, 2021, 11:11 AM IST
தோழியுடன் பேசியது ஒரு குத்தமா? பயிற்சி மருத்துவர் கடத்தி சென்று கொலை வெறி தாக்குதல்.. அமைச்சர் ஆதரவாளர் கைது.!

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடன் பணியாற்றும்  பயிற்சி மருத்துவரிடம் நெருங்கி பழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இது அப்பெண்ணின் தந்தைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

தூத்துக்குடி அருகே பயிற்சி மருத்துவர் கடத்தி சென்று கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடன் பணியாற்றும்  பயிற்சி மருத்துவரிடம் நெருங்கி பழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இது அப்பெண்ணின் தந்தைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

இது தொடர்பாக குடும்ப நண்பரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான இளையராஜாவிடம் புலம்பியுள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி முடிந்து வெளியே வந்த மருத்துவர் முருகப்பெருமானை 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர், மறைவான இடத்தில் வைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். 

 உடன் படிக்கும் பெண் மருத்துவருடன் எதற்கு பழக்கம் வைத்திருக்கிறாய்? என கேட்டு தாக்கியுள்ளனர். ஒரு நாள் முழுவதும் மருத்துவரை தாக்கி உள்ளனர். மேலும், ஒரு மணி நேரத்தில் நீ தூத்துக்குடியை விட்டு ஓடிவிட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என தெரிவித்தனர். இதனால், உயிர் பயத்தில் மதுரையில் உள்ள நண்பரின் வீட்டில் தஞ்சமடைந்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து, மதுரையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு வந்தார். 

இது தொடர்பாக பயிற்சி மருத்துவர் கடத்தி, தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் மருத்துவர் முருகப்பெருமாளை கடத்திச் சென்று தாக்கியது, ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, தென்பாகம் போலீசார் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளையராஜா அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களே ஆன நிலையில் திமுக பிரமுகர்கள் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!