சர்வதேச அளவில் ரயில் பெட்டிகள்.. தமிழகத்தை எண்ணி மோடி பெருமை கொள்கிறார்.. ரயில்வே அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2022, 3:09 PM IST
Highlights

இந்திய ரயில்வே துறை சார்பில் தமிழகத்திற்கு 3 ஆயிரத்து 865 கோடி ரூபாய்  செலவில் எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், காட்பாடி ஜங்ஷன் என 5 இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்திய ரயில்வே துறை சார்பில் தமிழகத்திற்கு 3 ஆயிரத்து 865 கோடி ரூபாய்  செலவில் எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், காட்பாடி ஜங்ஷன் என 5 இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் சர்வதேச அளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது என்பதை எண்ணி மோடி பெருமை கொள்கிறார் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையிலிருந்து 12000 LHB ரயில் பெட்டிகள் அடங்கிய புதிய ரயிலை மத்திய ரயில்வே, தொடர்பு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்ரீ.அஷ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து ரயில் பெட்டிகள் தயாரிக்கும் இயந்திரங்களை பார்வையிட்ட அவர் அது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடல் நலம் குறித்து விசாரித்தார் அங்கே பலருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொதுமக்கள் ரயில் பயணத்தில் சுலபமாகப் பயணிக்க வேண்டும் மேலும் அவர்களது பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவே ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக புதுப்பிக்கப்படும் என்றார்.

ராணி கமலா பத்தி இன் போபால் மத்திய பிரதேஷ் மேலும் காந்திநகர் குஜராத் ரயில் நிலையங்களிலும் இந்தியாவில் மேலும் 50 புதிய ரயில் நிலையங்கள்  சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் என்றார். அதே போல் தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த 5 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது என்று கூறியவர் எக்மோர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிக்காக 3 ஆயிரத்து 865 கோடி ரூபாயை இந்திய ரயில்வே ஒதுக்கியுள்ளது என்றார். ஏற்கனவே குஜராத் காந்தி நகர் மற்றும் மத்திய பிரதேசத்தில் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே தமிழ்நாட்டில் மேற்கண்ட 5 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.

மத்திய அரசின்  வந்தே பாரத திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் துறைமுகங்களை இணைக்கும் வகையில் ரயில்வே சேவை அமைக்கப்படும் என்றார். தமிழகத்தில் ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை சர்வதேச அளவில் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது இதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து அதில் தமிழ்நாடு சென்னையிலிருந்து ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது என்றார். 
 

click me!