யாரிடமும் மண்டியிட்டது இல்லை.. வின்சென்ட் சர்ச்சில் வரிசையில் முதல்வர் ஸ்டாலின். திருச்சி சிவா அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2022, 1:17 PM IST
Highlights

திமுக என்றும் யாரிடமும் மண்டியிட்டது இல்லை என்றும் எவரிடமும் அடாவடித்தனம் செய்ததும் இல்லை என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார். 

திமுக என்றும் யாரிடமும் மண்டியிட்டது இல்லை என்றும் எவரிடமும் அடாவடித்தனம் செய்ததும் இல்லை என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார். அதேபோல் ஆதாயத்திற்காக எந்த நேரத்திலும் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் விட்டுக் கொடுத்தது இல்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுகவை காட்டிலும் பாஜக திமுகவை விமர்சிப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. அதே நேரத்தில்  திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகளையும் பாஜகவிற்கு இழுக்கும் வேலையையும் அக்கட்சி செய்து வருகிறது. அந்த வரிசையில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான திருச்சி சிவாவின் மகன் சூரிய  சிவாவையும் பாஜக தனது கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளது. இது தமிழக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் நடந்த திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது மேடையில் உரையாற்றிய அவர் பாஜகவில் மிக கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:- அதிமுக ஆட்சியில் யார் வேண்டுமானாலும்  பணியில் சேரலாம் என கூறியதால் ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழக மின்வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியில் சேர்ந்து கொண்டுள்ளனர். அதிமுக யார் வேண்டுமானால் என்ற வார்த்தையை சேர்த்ததால் இது நடந்தது, தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியமே யார் வேண்டுமானாலும் என்ற வார்த்தையை தூக்கினர். தமிழக அரசு பணிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

அதன் மூலம் ஆறு லட்சம் வேலை வாய்ப்புகள் இருந்தால் உருவாக்கியுள்ளது எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்று திமுகவுக்கு நன்கு தெரியும், மத்திய அரசிடம் பேச வேண்டியதை பேசி பெற வேண்டியதை பெற்று அதே நேரத்தில் மத்திய அரசு எதேச்சதிகாரத்துடம் நடந்து கொண்டால், எல்லை மீறி செயல்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்க திமுக தயங்கியதில்லை. அதற்கான தெம்பு திராணி திமுகவிடம் இருக்கிறது. எதற்காகவும் யாரிடமும் மண்டி இடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை.  இதுவரை எதற்காகவும் அடாவடித்தனம் செய்ததில்லை, இதுவரை கொடுத்து 505 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு தீட்டும் திட்டங்கள் மக்களை போய் சேர்கிறதா என்பதை கண்காணிக்க  ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்த வின்சென்ட் சர்ச்சில், நேரு, கலைஞர் கருணாநிதி வரிசையில் ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார்.  எதற்காகவும் யாருக்காகவும் மண்டியிடும் பழக்கம் திமுகவிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!