தீட்சிதர்கள்னா அரசு உத்தரவை கூட மதிக்க மாட்டீங்களா..?? பகிரங்கமாக எச்சரித்த கே.பாலகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2022, 2:23 PM IST
Highlights

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்து முரண்டு பிடித்து வந்த நிலையில் உறுதியாக இருந்து கனகசபை மீது மக்கள் எரி வழிபடலாம் என தமிழக அரசு அனுமதித்திருப்பது பாராட்டத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்து முரண்டு பிடித்து வந்த நிலையில் உறுதியாக இருந்து கனகசபை மீது மக்கள் எரி வழிபடலாம் என தமிழக அரசு அனுமதித்திருப்பது பாராட்டத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் விவகாரம் தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. வழிபாட வரும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, சாதி பெயரை சொல்லி அவமரியாதை செய்வது என பல குற்றச்சாட்டுகள் அக்கோவில்  தீட்சிதர்கள் மீது இருந்து வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். இச் சூழ்நிலையில் கணேச தீட்சிதர் என்பவர்  கோயில் விதிமுறையை மீறி திருச்சிற்றம்பல மேடை மீது ஏரி சாமி திரசனம் செய்ய தனது மனைவியை அழைத்துச் சென்றார். இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது தன்னையும் தனது மனைவியையும் சக தீட்சிதர்கள் தாக்கியதாக அவர் புகார் கொடுத்தார்.

இதை அடுத்து தீட்சிதர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் 3 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த சம்பவத்தில் மறுநாள் கணேச தீக்ஷிதரின் மகன் தர்ஷன் தீட்சிதர் பெண் பக்தர் ஒருவரை திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றார். அப்போது வழக்கம் போல சகா தீக்ஷிதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண்ணை சாதிப்பெயரை குறிப்பிட்டு அவமரியாதை செய்தனர் இந்நிலையில் ஜெய்சீலா என்ற பெண் பக்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் 20 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் இச் சம்பவத்தை கண்டித்ததுடன், தீட்சிதர்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர். புதுவையில் கடந்த 17ஆம் தேதி தமிழக அரசு பொதுமக்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம் என அரசாணை வெளியிட்டது.

இது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அது இன்றைய தினமே அமலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆரம்பத்தில் விஐபி தரிசனம் மட்டுமே கனகசபை மீது அனுமதிக்கப்பட்டது, பின்பு பொதுமக்கள் அனைவரும் வழிபட்ட நிலையில் யாருக்கும் அனுமதி இல்லை என்ற முடிவை தீட்சிதர்கள் எடுத்தனர். இதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன, இந்த விஷயத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி கனகசபை மீது ஏறி அனைவரும் வழி விடலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால் தீட்சிதர்கள் இப்போதும் இந்த முடிவுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் எதற்கெடுத்தாலும் இவ்வாறு அவர்கள் முரண்டு பிடிக்கும் நிலை சரியானது அல்ல.  ஆகினும் உறுதியாக இருந்த அரசாங்கம் உத்தரவை உடனடியாக அமல் படுத்தி மக்கள் வழிபடுவதை  உறுதி செய்திட வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டி வரவேற்கிறேன் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

click me!