
இந்தியாவில் உள்ள ரயில்கள் நீல நிறத்தில் மட்டுமே இருந்து வரும் நிலையில் தற்போது ரயில்வே துறை ரயில்களின் நிறத்தை அடர் காவிக்கு மாற்றி வருகிறது. எங்கும் காவி மயம் என்ற பாஜக கொள்கைகள் தற்போது ரயில்வே துறையையும் விட்டு வைக்கவில்லை.
இந்தியாவில் விரைவு ரயில்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவாது நீல நிறம்தான். அனைத்து விரைவு ரயில்களும் நீல நிறத்தில்தான் இருந்து வருகின்றன. இந்நிலையில் அவற்றின் நிறத்தை தற்போது ரயில்வே துறை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறது.
இந்திய ரயில்வே துறையானது, பெரும்பாலான விரைவு ரயில்களில் இடம்பெற்றுள்ள நீல நிறத்தை மாற்றி, அடர்காவி வண்ணம் பூசும் வேலையில் இறங்கியுள்ளது.இந்திய ரயில்வே துறை, ஒருபுறத்தில் உணவுக்கான செயலி, டிக்கெட் புக்கிங்கிற்கு செயலி நவீனமயமாகி வருகிறது.
மாற்றம் என்ற பெயரில் இவ்வசதிகளை செய்துவரும் ரயில்வே, மற்றொரு புறத்தில், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் பாணியில், ரயில்களின் நிறத்தை காவிக்கு மாற்றும் வேலையிலும் இறங்கியுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் இயங்கும் ஒரு சில முக்கிய விரைவு ரயில்களை தவிர மற்ற ரயில்களின் நீல நிறத்தை மாற்றி பிரவுன் (பழுப்பு) நிறம் அடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சென்னையில் தயாராகும் ரயில்களின் கோச்சுகளில் பிரவுன் நிறம் அடிக்கப்படுகிறது. சுமார் 30 ஆயிரம் கோச்சுகள் இந்த அடர்காவி நிறத்தில் தயாராகி வருகின்றன.புதிய அடர்காவி வண்ணத்தைக் கொண்ட முதல் ரயிலான தில்லி - பதான்கோட் எக்ஸ்பிரஸ், ஜூன் மாத இறுதியில் இயக்கப்படுகிறது.